சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள ஊர்களின் பெயர்கள் தமிழில் எவ்வாறு உச்சரிக்கப்படு கிறதோ அதேபோல் ஆங்கிலத்தில் உச்சரிக்கவும் எழுதவும் வேண்டும் என்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதை தமிழ் ஆர்வலர்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.
உதாரணமாக, எழும்பூரை ஆங்கிலத்தில் 'எக்மோர்' எனக் குறிப்பிட்டு வந்த நிலையில் இனி எழும்பூர் என்றே மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் 'Tondiyarpet' என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் தண்டையார்பேட்டை, இனி ஆங்கில மொழியிலும் 'Thandaiyaar pettai' என்றே உச்சரிக்கப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. திருவல்லிக்கேணி என்பதை 'டிரிப்ளிகேன்' என எழுதாமல் திருவல்லிக்கேணி என்றே ஆங்கிலத்திலும் எழுதவேண்டும்.
இதேபோல் புரசைவாக்கம், வேப்பேரி, வ.உ.சி.நகர், கொடுங்கை யூர், இருக்கன்சேரி, செஞ்சேரி ஆகிய பெயர்கள் தமிழில் உச்சரிப்பதுபோல் ஆங்கிலத்திலும் உச்சரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர்களின் பரிந்து ரையின் பேரில் பெறப்பட்ட பெயர் மாற்றங்கள் அரசு அமைத்த குழு வால் பரிசீலிக்கப்பட்டு, சில மாற்றங்கள் ஏற்கப்பட்டும் சில மாற்றங்கள் நிராகரிக்கப்பட்டும் உள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

