திருச்சி: வண்ணத் தாளில் சுற்றி யிருந்த நாட்டுவெடியைத் தின்பண்டம் என நினைத்து கடித்துத் தின்ன முயன்ற சிறுவன் உடல் சிதறி உயிரிழந்தான்.
திருச்சி மாவட்டம், முசிறி அருகே நடந்துள்ள இந்தச் சம்பவம் தொடர்பில் சிறுவனின் உறவினர்கள் கங்காதரன், மோகன்ராஜ், செல்வகுமார் ஆகிய மூவரிடமும் தொட்டியம் போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தொட்டியம் அருகே உள்ள அலகரை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கங்காதரன், தமிழரசன், மோகன்ராஜ்.
உறவினர்களான மூவரும் முசிறி அருகே உள்ள பாப்பாபட்டி பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவரிடம் நாட்டுவெடிகளை விலைக்கு வாங்கிக்கொண்டு மணமேடு பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் நாட்டு வெடிகளை வீசி மீன்பிடித்துள்ளனர்.
பிடித்த மீன்களை அலகரையில் உள்ள சகோதரர் பூபதி என்பவர் வீட்டிற்கு கொண்டு வந்துள்ளனர்.
மீதமிருந்த ஒரு நாட்டு வெடியை அங்கிருந்த கட்டிலில் வைத்துவிட்டு மீன்களை சுத்தம் செய்ய அனை வரும் சென்றுள்ளனர்.
அப்போது அங்கு வந்த பூபதி யின் ஆறு வயது மகன் விஷ்ணுதேவ் கட்டிலில் வண்ணத்தாளுடன் இருந்த நாட்டுவெடியை தின்பண்டம் என நினைத்து கடித்ததாகக் கூறப்படுகிறது.
இதில் நாட்டுவெடி பலத்த சத்தத்துடன் வெடித்ததில் விஷ்ணு தேவ் சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தான்.
இதையடுத்து சிறுவனின் பெற்றோர் விஷ்ணுதேவ் உடலை போலிசுக்கு தெரியாமல் அப்பகுதி யில் உள்ள சுடுகாட்டில் எரித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து புகார் செய்யப்பட்டதை அடுத்து போலி சாரின் விசாரணை தொடர்கிறது.

