ராமேஸ்வரம் அருகே பாம்பன் விசைப்படகு மீனவரின் வலையில் ராட்சத கடல் விரால் மீன்கள் ஏராளம் சிக்கின. இதில் ஒரு மீன் மட்டும் ரூ.14,000 ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மற்ற மீனவர்களின் படகுகளில் 500 முதல் ஒரு டன் வரையிலான வௌவால் மீன், மாவூலா மீன்கள் சிக்கின. இதை கிலோ ரூ.300க்கு வியாபாரிகள் வாங்கி கேரளா, கோவை மீன் சந்தைக்கு அனுப்பினர். வழக்கமாக 2 முதல் 5 கிலோ வரை கடல் விரால் மீன்கள் சிக்கும். நேற்று 37 முதல் 40 கிலோவுடைய மூன்று ராட்சத விரால் மீன்கள் சிக்கின. இதில் 37 கிலோ மீனை 14,000 ரூபாய்க்கு வியாபாரி ஒருவர் வாங்கிச் சென்றார்.

