அமைச்சர் இல்லத் திருமணம்; காற்றில் பறந்த கட்டுப்பாடுகள்

அமைச்சர் இல்லத் திருமணம்; காற்றில் பறந்த கட்டுப்பாடுகள்

1 mins read
82f3689b-fd09-4689-b944-5902fd4d1ae2
அமைச்சர் ராதாகிருஷ்ணன் இல்லத் திருமண விழாவில் ஊரடங்கு விதிமுறைகளை மீறும் வகையில் முகக்கவசம், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் கூட்டம் கூட்டமாக ஏராளமானோர் கலந்துகொண்டனர். படம்: தமிழக ஊடகம் -

பொள்ளாச்சி: திருமண நிகழ்ச்சியில் 50 பேருக்கு மேல் விருந்தினர்கள் கூடுவதற்கு அனுமதியில்லை என தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், அைமச்சர் வீட்டுத் திருமணத்தில் ஏராள மானோர் திரண்டிருந்தது மக்கள் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கொரோனா கிருமித்தொற்றுக்கு ஆளாகும் அச்சமின்றி, பங்கேற்ற பலரும் முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியையும் பின் பற்றாமல் திருமணத்தில் பங்கேற்ற னர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோலார்பட்டியைச் சேர்ந்தவர் கால்நடைத்துறை அமைச்சர் ராதா கிருஷ்ணன்.

இவரது மகள் ஜெயபிரனிதா, பொள்ளாச்சி நகராட்சி முன்னாள் துணைத் தலைவர் விஜயகுமாரின் மகன் ஆதித்யன் ஆகியோருக்கு கோலார்பட்டி ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலில் நேற்றுமுன்தினம் திருமணம் நடந்தது.

அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் பிரம்மாண்டமாக நடந்த திருமணத் தில் 15 அமைச்சர்கள், அரசுத் துறை உயர் அதிகாரிகள், கட்சி நிர்வாகி கள், தொண்டர்கள், உறவினர்கள் என கூட்டம் கூட்டமாக ஆயிரக் கணக்கானவர்கள் கலந்துகொண்டு அங்குமிங்கும் வலம் வந்தனர்.

சென்னையில் கொரோனா உச்சம் தொட்ட நிலையில், அங்கி ருந்தும் ஏராளமான அதிகாரிகள் இந்த திருமண நிகழ்வில் கலந்துகொள்ள வந்திருந்தனர்.

தென்னந்தோப்பில், விருந்தினர்களுக்கு தனிப் பந்தல் அமைத்து 'புஃபே' முறையில் உணவு பரிமாறப்பட்டது. சமையல் செய்வ தற்கு என்று தனிக்கூடம் அமைத்து இரு நாட்களாக சமையல் நடந்துவந்தது.

அமைச்சர் வீட்டுத் திருமணம் என்பதால் 300க்கும் மேற்பட்ட போலிசார் கிராமத்திலும் பிரதான சாலைகளிலும் பாதுகாப்புப் பணி யில் ஈடுபட்டனர்.