தமிழகத்தில் 38,716 பேர் பாதிப்பு

தமிழகத்தில் 38,716 பேர் பாதிப்பு

1 mins read
a832e94b-b14d-402b-835f-ddd0321372f7
தமிழகத்தில் கொரோனா கிருமித் தொற்றால் 38,716 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பலி எண்ணிக்கை 349 ஆக அதிகரித்துள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. படம்: ஏஎப்பி - அருண் சங்கர் -

சென்னை: தமிழகத்தில் கொரோனா கிருமித் தொற்றால் 38,716 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பலி எண்ணிக்கை 349 ஆக அதிகரித்துள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் மேலும் 1,875 பேருக்கு இத்தொற்று பரவி இருந்தது உறுதியானது. இதில் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்த 38 பேரும் அடங்குவர். கிருமித் தொற்றால் மொத்தம் 38,716 பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 349 பேர் உயிரிழந்துள்ளனர்.

"நேற்றைய தேதி வரையில் தமிழகத்தில் 6,55,675 மாதிரி கள் சோதிக்கப்பட்டுள்ளன.

"இதுவரை குணமடைந்து திரும்பியவர்களின் எண் ணிக்கை 20,705 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 17,659 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் மொத்த பாதிப்பில் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 1,999 பேரும் 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 32,422 பேரும் 60 வயதை கடந்தவர்கள் 4,295 பேரும் உள்ளனர்," என்று கூறப்பட்டுள்ளது.