ஓசூர்: டிக்-டாக்கில் ஒரு வித்தி யாசமான காெணாளிப் பதிவை வெளியிட விரும்பிய இளையர் உயிருடன் மீனை விழுங்கியபோது மூச்சுத் திணறி இறந்தார்.
விளையாட்டு வினையாகும் என்று சொல்வார்கள். வெற்றிவேல் விஷயத்தில் இது நிரூபணமாகி உள்ளது. இந்தச் சம்பவம் ஓசூர் வாழ் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் காளேகுண்டா அருகில் உள்ள பார்வதி நகரைச் சேர்ந்தவர் சக்தி வேல். இவரது மகன் வெற்றிவேல், 22, கட்டட மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு மனைவியும் 2 வயதில் சரண் என்ற மகனும் உள்ள னர். நேற்று முன்தினம் வெற்றிவேல் தனது நண்பர்கள் இருவருடன் ஓசூர் தேர்பேட்டை பகுதியில் உள்ள ஏரிக்கு மீன்பிடிக்கச் சென்றார்.
அப்போது அவர் மது அருந்தி இருந்ததாகவும் கூறப்படுகிறது.
மீன்பிடித்துக்கொண்டிருக்கும் போது கைபேசியில் 'டிக்-டாக்' காெணாளி வெளியிடுவதற்காக மீனை உயிருடன் விழுங்கினார். வெற்றிவேல் விழுங்கிய மீன் எதிர்பாராதவிதமாக அவரது சுவாசக்குழாயில் சிக்கியது.
இதனால் மூச்சுத்திணறிய அவரை நண்பர்கள் ஓசூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரி சோதித்த மருத்துவர்கள் வெற்றி வேல் ஏற்கெனவே இறந்து விட்ட தாகக் கூறினர். போலிசாரின் விசாரணை தொடர்கிறது.

