எட்டு லட்சம் முதியவர்கள் கண்காணிப்பு

1 mins read
b6f0e5cf-376a-4332-87a1-ded596dcdcfc
-

சென்னை: தமி­ழ­கத்­தில் கொவிட்-19 நோயால் உயி­ரி­ழக்­கும் விகி­தம் 0.8 என்று மிகக்­கு­றை­வான அள­வில் உள்­ள­தாக அமைச்­சர் ஜெயக்­கு­மார் தெரி­வித்­துள்­ளார்.

சென்­னை­யில் தற்­போது 8 லட்­சம் முதி­ய­வர்­கள் கண்­கா­ணிக்­கப்­பட்டு வரு­வ­தாக செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசு­கை­யில் அவர் குறிப்­பிட்­டார்.

"கொரோனா கிரு­மித்­தொற்­றால் உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் எண்­ணிக்­கையை மறைக்க முடி­யாது. இதை வைத்து அர­சி­யல் செய்­யும் கட்­சி­கள் அர­சி­ய­லில் தனி­மைப்­படுத்­தப் படு­வார்­கள்.

"நிர்­வாகக் கார­ணங்­க­ளுக்­கா­கவே சுகா­தா­ரத்­துறை செய­லர் மாற்­றப்­பட்­டுள்­ளார். இதில் எவ்­வித உள்­நோக்­க­மும் இல்லை," என்­றும் அமைச்­சர் ஜெயக்­கு­மார் தெளிவுபடுத்­தி­னார்.

சென்­னை­யில் கொரோ­னா­ கிருமித்­தொற்­றுப் பர­வல் அதி­க­மாக இருப்­ப­தா­கக் குறிப்­பிட்ட அவர், பொது­மக்­கள் முகக்­க­வ­சம் அணி­தல், சமூக இடை­வெ­ளியை கடைப்­பி­டித்­தல், கிரு­மி­நா­சினி பயன்­ப­டுத்­து­தல் ஆகிய நடை­மு­றை­க­ளைப் பின்­பற்­றி­னால் கிரு­மித்­தொற்று வராது என்­றார்.