சென்னை: தமிழகத்தில் கொவிட்-19 நோயால் உயிரிழக்கும் விகிதம் 0.8 என்று மிகக்குறைவான அளவில் உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தற்போது 8 லட்சம் முதியவர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாக செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் குறிப்பிட்டார்.
"கொரோனா கிருமித்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மறைக்க முடியாது. இதை வைத்து அரசியல் செய்யும் கட்சிகள் அரசியலில் தனிமைப்படுத்தப் படுவார்கள்.
"நிர்வாகக் காரணங்களுக்காகவே சுகாதாரத்துறை செயலர் மாற்றப்பட்டுள்ளார். இதில் எவ்வித உள்நோக்கமும் இல்லை," என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெளிவுபடுத்தினார்.
சென்னையில் கொரோனா கிருமித்தொற்றுப் பரவல் அதிகமாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், கிருமிநாசினி பயன்படுத்துதல் ஆகிய நடைமுறைகளைப் பின்பற்றினால் கிருமித்தொற்று வராது என்றார்.

