விருதுநகர்: விருதுநகரில் சிபிசிஐடி (குற்றப்பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வுத் துறை) அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், உள்ளே நுழைய தாங்கள் பயன்படுத்திய ஜாக்கி, திருப்புளி போன்றவற்றை போலிஸ் அதிகாரியின் மேசைமீது வைத்துவிட்டுச் சென்றனர்.
பல முக்கிய வழக்கு விசாரணைகள் நடந்துள்ள அந்த அலுவலகத்தில் இப்போது மிக மிக்கியமான சில வழக்குகளும் விசாரணையில் இருக்கின்றன.
சிபிசிஐடி அலுவலக வளாகத்தில் இருந்த ஆவணங்கள் மற்றும் கணினிகள் எதுவும் திருட்டுப் போகவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. பூட்டு உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து சிபிசிஐடி அலுவலகத்திற்கு போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

