ஊரடங்கு வதந்தி: சொந்த ஊருக்கு விரையும் பொதுமக்கள்

1 mins read
34d11d77-f078-48ef-81ae-e76d9dfbb705
படம்: ஊடகம் -

சென்னை: கொரோனா கிரு­மித்­தொற்று பாதிப்பு அதி­க­ரித்து வரு­வ­தால் சென்­னை­யில் மீண்­டும் முழு ஊர­டங்கு அமல்­ப­டுத்­தப்­படும் என்று பர­விய வதந்­தி­யால் ஏரா­ள­மா­னோர் சொந்த ஊருக்­குச் செல்ல முற்படுவதாக தெரியவந்­துள்­ளது.

கடந்த இரு தினங்­க­ளாக சென்னை மற்­றும் புற­ந­கர்ப் பகு­தி­களில் வசிக்­கும் ஏரா­ள­மா­னோர் வாக­னங்­களில் பொருட்­களை ஏற்­றிக்­கொண்டு சொந்த ஊருக்­குச் செல்­வ­தைப் பார்க்க முடி­வ­தாக தமி­ழக ஊட­கங்­கள் தெரி­வித்­துள்­ளன.

முழு ஊர­டங்கு குறித்து சமூக வலைத்­த­ளங்­களில் பல்­வேறு தக­வல்­கள் பரவி வரு­கின்­றன. மிக விரை­வில் ஐந்­தாம் கட்ட ஊர­டங்கு முடி­வுக்கு வர உள்ள நிலை­யில், சொந்த ஊருக்­குத் திரும்­பு­வோர் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­கிறது.

சென்­னை­யில் பார்த்து வந்த வேலை பறி­போ­ன­தால் பலர் ஊர் திரும்­பபுவ­தாக தெரி­வித்­துள்­ள­னர்.

வேலை­யில்­லா­த­தால் சென்­னை­யில் வீட்டு வாடகை செலுத்த முடி­ய­வில்லை என்று பலர் கூறி­யுள்­ள­னர்.

இதற்­கி­டையே பொருட்­களை ஏற்­றிச் செல்­லும் வாக­னங்­க­ளின் கட்­ட­ண­மும் கணி­ச­மாக அதி­க­ரித்­துள்­ளது. படம்: ஊட­கம்