சென்னை: கொரோனா கிருமித்தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று பரவிய வதந்தியால் ஏராளமானோர் சொந்த ஊருக்குச் செல்ல முற்படுவதாக தெரியவந்துள்ளது.
கடந்த இரு தினங்களாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வசிக்கும் ஏராளமானோர் வாகனங்களில் பொருட்களை ஏற்றிக்கொண்டு சொந்த ஊருக்குச் செல்வதைப் பார்க்க முடிவதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
முழு ஊரடங்கு குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. மிக விரைவில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு முடிவுக்கு வர உள்ள நிலையில், சொந்த ஊருக்குத் திரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சென்னையில் பார்த்து வந்த வேலை பறிபோனதால் பலர் ஊர் திரும்பபுவதாக தெரிவித்துள்ளனர்.
வேலையில்லாததால் சென்னையில் வீட்டு வாடகை செலுத்த முடியவில்லை என்று பலர் கூறியுள்ளனர்.
இதற்கிடையே பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் கட்டணமும் கணிசமாக அதிகரித்துள்ளது. படம்: ஊடகம்

