காணொளியைப் பார்த்து துப்பாக்கியைத் தயாரித்த மூன்று இளையர்கள் கைது

காணொளியைப் பார்த்து துப்பாக்கியைத் தயாரித்த மூன்று இளையர்கள் கைது

1 mins read
79d8f1f3-c3e7-4745-94f1-ab1d3f6dc4a8
போலிசாரால் பறிமுதல் செய்யப்பட்ட நான்கு துப்பாக்கிகள். படம்: ஊடகம் -

பண்ருட்டி: பண்ருட்டி அருகே யூடியூப் காணொளியைப் பார்த்து பிளாஸ்டிக் குழாய்களைப் பயன்படுத்தி துப்பாக்கி தயாரித்த மூவரை காடாம்புலியூர் போலிசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூர் பகுதியைச் சேர்ந்த மூன்று வாலிபர்கள் அங்குள்ள பத்திரப்பதிவு அலுவலகம் அருகில் நின்று கொண்டு, அவ்வழியாக வருவோர் போேவாரை எல்லாம் மிரட்டிக்கொண்டிருந்துள்ளனர்.

இதையடுத்து அங்கு வந்த போலிசார், கையில் கற்களையும் துப்பாக்கி போன்ற வடிவமைப்பில் இருந்த பிளாஸ்டிக் குழாய்களையும் வைத்திருந்த மூன்று வாலிபர்களிடமும் விசாரணை நடத்தினர்.

மூவரும் காடாம்புலியூர் அருகே உள்ள புதுப்பாளை யத்தைச் சேர்ந்த தனபால் மகன் சிவப்பிரகாசம், 24, ஆனந்தன் மகன் வினோத்குமார், 21, ரவி மகன் வெற்றி வேல், 21, என்பது தெரியவந்தது.

முயல், அணிலை வேட்டையாடுவதற்காக அவர்கள் நாட்டுத்துப்பாக்கியைத் தயாரிக்க முடிவு செய்துள்ள னர். அதன்படி மூவரும் யூ-டியூப்பில் நாட்டுத்துப்பாக்கி தயாரிக்கும் காணொளிகளைப் பார்த்து, அதன்படி துப்பாக்கி தயாரிப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளனர்.

அவர்களுக்குத் தேவையான பொருட்கள் ஏதும் சரியான முறையில் கிடைக்காததால் பிளாஸ்டிக் குழாய்களை வாங்கி அதனைப் பயன்படுத்தி துப்பாக்கி போன்று வடிவமைத்து அதில் ஒயர்களையும் இணைத்துள்ளனர். இதைப் பயன்படுத்தி அவர்கள் அணில் மற்றும் குருவிகளை வேட்டையாடியதாகவும் கூறப்படுகிறது.