பெரம்பலுார்: உடற்கூறு ஆய்வுச் சோதனை செய்வதற்கு பெரம்பலூர் அரசு மருத்துவ மனையில் ரூ.2,000 லஞ்சம் வாங்குவதாக மக்கள் நீதி மையம் கட்சி நிர்வாகி சாதிக் பாஷா குற்றம்சாட்டி உள்ளார்.
பெரம்பலூரைச் சேர்ந்தவரான சாதிக் பாஷா, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள காணொளியில், பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுச் சோதனை செய்யும் பணியில் இருந்தவர் உடற்கூறு ஆய்வுச் சோதனை செய்வதற்காக என்னிடம் ரூ.2,000 லஞ்சம் வாங்கினார். என்னிடம் இருந்ததால் கொடுத்தேன். ஏழைகளால் எப்படி கொடுக்கமுடியும்? பணம் இல்லை என்பதற்காகத்தான் ஏழைகள் அரசு மருத்துவ மனைக்கு வருகின்றனர். இப்பிரச்சினையில் தமிழக அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காணொளியில் அவர் கூறியுள்ளார்.

