மதுரை, வேலூர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் பாதிப்பு

மதுரை, வேலூர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் பாதிப்பு

1 mins read
feb6d74b-0608-49c7-8fd9-254fa06e8726
தமிழக நலத்துறை அதிகாரிகள் சென்னையில் நடமாடும் கோவிட்-19 சோதனை வாகனத்தின் மூலம் மக்களைத் தேடிச்சென்று கொவிட்-19 தொற்றுச் சோதனையை நடத்தி வருகின்றனர். படம்: ஏஎப்பி - அருண் சங்கர் -

சென்னை: தமிழகத்தின் தலைநகரான சென்னை மாவட்டத்தில் மட்டுமின்றி, மதுரை, திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூர், ராணிப்பேட்டை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங் களிலும் கொரோனா கிருமித் தொற்றின் பாதிப்பு உயர்ந்து வருவதாக தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் மக்கள் அடர்த்தி அதிகம் உள்ளதால் கொரோனா கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

இந்நிலையில் சென்னை உள்பட வெளியூர்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களால் மதுரை, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 7 மாவட்டங் களிலும் கொரோனா பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் 560, மதுரையில் 442, ராணிப்பேட்டையில் 234, திருவண்ணாமலையில் 701, தூத்துக்குடியில் 436, திருநெல்வேலியில் 489 பேருக்கும் இத்தொற்று உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த 7 மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்புடன் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்ற னர். உயிரிழப்பும் தற்போது இங்கு கணிசமாக உயர்ந்துள்ளது. எனவே இந்த மாவட்டங்களில் உடனடியாக பரிசோதனைகளை துரிதப்படுத்த வேண்டும் என்றனர்.