மாயமான 277 நோயாளிகளில் 90 பேர் சிக்கினர்

மாயமான 277 நோயாளிகளில் 90 பேர் சிக்கினர்

2 mins read
71fa8127-5fa6-4880-a36f-f9ff036acf61
சென்னையில் அரசு அலுவலகங்களில் கிருமி நாசினி அடித்துச் சுத்தப்படுத்தும் தமிழ் நாடு நலவாழ்வுத்துறை ஊழியர்கள். படம்: ஏஎப்பி - அருண் சங்கர் -

சென்னை: கொவிட் 19 கிரு­மித்தொற்­று­டன் காணா­மல் போன 277 பேரில் 90 பேர் கண்­டு­பி­டிக்­கப் பட்­டுள்­ள­தாக சென்னை போலி­சார் தெரி­வித்­துள்­ள­னர். மீத­முள்­ள­வர்­க­ளைத் தேடும் பணி­யும் தொடர்ந்து வரு­கிறது.

காணா­மல் போன­வர்­க­ளால் நல்ல உடல்­நி­லை­யு­டன் உள்ள மற்றவர்­க­ளுக்­கும் இத்­தொற்று பரவி விடும் அபா­யம் உள்­ள­தால் சென்­னை­வாழ் மக்­கள் மத்­தி­யில் அச்­சம் நிலவி வரு­கிறது.

இந்­நி­லை­யில், காணா­மல் போன 277 கொரோனா நோயாளிகளில் மூன்­றில் ஒரு பகு­தி­யி­னரை சென்னை காவல்­து­றை­யி­னர் கண்­டு­பி­டித்­துள்­ளது மக்­களை சற்றே நிம்­மதி அடைய வைத்­துள்ளது.

சென்­னை­யில் மே 23 முதல் ஜூன் 11ஆம் தேதி வரை நடத்­தப் பட்ட கொரோனா பரி­சோ­தனையில் 277 பேருக்கு கொவிட் 19 கிரு­மித்­தொற்று இருப்­பது உறு­திப்படுத்­தப்­பட்­டது. இதை­ய­டுத்து, கிரு­மித் தொற்­றுள்­ள­வர்­க­ளைத் தொடர்புகொண்­ட­போது அவர்­க­ளது கை பேசி­கள் அடைத்து வைக்­கப்பட்­டி­ருந்­தன. வீட்டு முக­வ­ரி­யும் போலி­யா­ன­தாக இருந்­த­தால் சென்னை நக­ராட்சி அலு­வ­லர்­கள் சென்னை காவல்­து­றை­யில் இது­கு­றித்து புகார் செய்­த­னர்.

இதை­ய­டுத்து 'சைபர் கிரைம்' போலி­சார் உத­வி­யு­டன் 277 பேரைக் கண்­ட­றி­யும் முயற்­சி­யில் தற்­போது 90 பேர் அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ள­னர்.

புளி­யந்­தோப்பு, வண்­ணா­ரப்பேட்டை பகு­தி­க­ளைச் சேர்ந்தவர்­க­ளைத்­தான் அதி­கம் காண­வில்லை என்­றும் கூறப்­பட்­டுள்­ளது.

எங்­கள் அதி­கா­ரி­கள் ஒவ்­வொரு வீட்­டிற்­கும் சென்று சரி­பார்த்து, அங்கு வழங்­கப்­பட்ட தொலை­பேசி எண்­க­ளி­ல் காணா­மல் போன­வர்­க­ளு­டன் தொடர்புகொண்­ட­னர்.

முக­வரி அல்­லது தொலை­பேசி எண் சரி­யாக இருந்­த­தால் 277 பேரில் 90 பேரை எங்­க­ளால் கண்­டு­பி­டிக்க முடிந்­தது என்று மூத்த போலீஸ் அதி­காரி ஒரு­வர் கூறி­யுள்­ளார்.

பொது­மக்­கள் நோயா­ளி­யைப் புறக்­க­ணிக்­கத் தொடங்குவதால் இது அவர்­க­ளி­டம் ஒரு பெரிய தாக்­கத்தை ஏற்­ப­டுத்­து­கிறது என்றார்.