வெள்ளையன்: ஜூன் 30 வரை பிற்பகல் 2 மணி முதல் மூடப்படும் சென்னையில் மீண்டும் வங்கி, கடை அடைப்பு

வெள்ளையன்: ஜூன் 30 வரை பிற்பகல் 2 மணி முதல் மூடப்படும் சென்னையில் மீண்டும் வங்கி, கடை அடைப்பு

2 mins read
869fb5e2-437f-47c0-b20f-36b62e0b28f0
நாட்டின் நலன், மக்கள் நலன், வணிகா்களின் நலன் கருதி கிருமிப் பரவலைத் தடுக்கும் வகையில் ஜூன் 30 வரை காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும் என்று செய்தியாளர்களிடம் கூறிய தமிழ்நாடு வணிகா் சங்கப் பேரவைத் தலைவா் த.வெள்ளையன். படம்: ஊடகம் -

சென்னை: பொதுமக்களில் பலரும் அடிக்கடி செல்லும் இடங்களாக இருப்பவை தேநீா் கடைகள், வங்கிகள், காய்கறி கடைகள்தான். சென்னையில் இவை அனைத்தையும் திறப்பதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களிலும் ஜூன் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் 12 நாட்களுக்கு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கிருமித்தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் சென்னையில் இம்மாதம் 30ஆம் தேதி வரை பிற்பகல் 2 மணிக்குப் பிறகு கடைகள் அடைக்கப்படும் என தமிழ்நாடு வணிகா் சங்கப் பேரவைத் தலைவா் த.வெள்ளையன் அறிவித்துள்ளாா்.

அத்தியாவசியப் பொருள்களான பால், காய்கறி, மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படுவதற்கு அனைத்து வணிகா்களும் பொது மக்களும் அரசின் வழிகாட்டுதல்கள் சட்ட விதிகளுக்கு உள்பட்டு அறிவித்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என அவர் கூறியுள்ளாா்.

பொதுமுடக்கம் அமலில் உள்ள 12 நாட்களில் பின்வரும் கட்டுப் பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

வங்கிகள் 33% பணியாளா்க ளுடன் வரும் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

பணம் எடுக்கும் இயந்திரங்கள் வழக்கம்போல இயங்கும்.

காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள், பெட்ரோல் நிரப்பு நிலை யங்கள் உரிய விதிகளுக்கு உட்பட்டு சமூக இடைவெளியுடன் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பாா்சல் சேவை மட்டுமே வழங்க அனு மதிக்கப்படும். தேநீா் கடைகள் இயங்க அனுமதியில்லை.

சென்னையில் இருந்து திரு மணம், மருத்துவம், இறப்பு போன்ற காரணங்களுக்காக பிற மாவட்டங் களுக்குச் செல்ல தகுந்த ஆதா ரங்களை சமா்ப்பிக்கும் நபா்களுக்கு மட்டுமே இணைய அனுமதிச் சீட்டு அளிக்கப்படும்.

மருத்துவமனைகள், பரிசோத னைக் கூடங்கள், மருந்தகங்கள், 'ஆம்புலன்ஸ்', அமரர் ஊர்தி சேவை கள், சரக்குப் போக்குவரத்துகள் தொடரும்.

வெளிமாநிலங்களில் இருந்து வருகின்ற ரயில்களுக்கும் விமா னங்களுக்கும் அதேபோன்று வெளி நாடுகளில் இருந்து வரும் விமானங் களுக்கும் இப்போதுள்ள நடை முறையே தொடரும்.

சென்னை உள்பட நான்கு மாவட்ட மக்களின் வாழ்வாதாரத் திற்காக அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கும் 13.35 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கும் தலா ரூ.1000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.