சென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது.
இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
மற்ற மாவட்டங்களைவிட சென்னையில்தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே செல்கிறது.
இந்நிலையில், நேற்று திமுக இலக்கிய அணி இணைச்செயலாளர் விபி கலைராஜனுக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று உறுதியானதை அடுத்து வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வி.பி. கலைராஜன் தியாகராய நகர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

