சிறையில் 16வது நாளாக முருகன் உண்ணாவிரதம்

1 mins read
75edc2dd-20d6-4591-9f98-c9d66838c621
நேற்று 16வது நாளாக முருகன் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். உண்ணாவிரதம் காரணமாக கிட்டத்தட்ட 3 கிலோ எடை குறைந்துள்ள முருகனின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். உண்ணாவிரத்தை கைவிடும்படி சிறை அதிகாரிகள் முருகனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். -

வேலூர்: முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன், வேலூர் ஆண்கள் சிறையிலும் அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

தனது மனைவி மற்றும் உறவினர்களிடம் வாட்ஸ்அப் காணொளி அழைப்பு மூலம் பேச அனுமதி வழங்குமாறு சிறைத்துறை நிர்வாகத்துக்கு முருகன் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அதற்கு சிறைத்துறை நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை.

அதனால் மனவேதனை அடைந்த முருகன், ஜீவசமாதி அடைய வேண்டி இம்மாதம் 1ஆம் தேதி முதல் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

முருகனின் உடல்நிலை சோர்வடைந்ததால் குளுகோஸ் ஏற்றப்பட்டு வருகிறது.

நேற்று 16வது நாளாக முருகன் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். உண்ணாவிரதம் காரணமாக கிட்டத்தட்ட 3 கிலோ எடை குறைந்துள்ள முருகனின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். மேலும் அவரிடம்

உண்ணாவிரத்தை கைவிடும்படி சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

முருகனின் உடல்நிலை குறித்து தினமும் சென்னை சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.