அன்புமணி: சித்த மருத்துவம் மூலம் 5 நாட்களில் குணமடையும் கொவிட்-19 நோயாளிகள்

அன்புமணி: சித்த மருத்துவம் மூலம் 5 நாட்களில் குணமடையும் கொவிட்-19 நோயாளிகள்

1 mins read
df6d7de5-c156-47b9-b419-9d6497323712
தமி­ழ­கத்­தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 25 ஆயி­ரம் பேருக்கு பரி­சோ­தனை நடத்தப்பட்டது. படம்: ஊட­கம் -

சென்னை: சித்த மருத்­துவ முறை­யில் 5 நாட்­களில் கொவிட்-19 நோயா­ளி­கள் குண­ம­டை­வது உறுதி செய்­யப்­பட்­டுள்­ள­தால், தமி­ழக அரசு அந்த முறையை கடைப்­பி­டிக்க வேண்­டும் என பாமக இளை­ய­ர­ணித் தலை­வர் அன்­பு­மணி ராம­தாஸ் வலி­யு­றுத்தி உள்­ளார்.

இதன் மூலம் சென்­னை­யில் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களை விரை­வா­கக் குணப்­ப­டுத்தி, சென்­னையை கொவிட்-19 நோய் இல்­லாத நக­ர­மாக மாற்ற முடி­யும் என அறிக்கை ஒன்­றில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

கொரோனா கிரு­மித்­தொற்­றால் சீனா மிக மோச­மா­கப் பாதிக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யில், அதி­லி­ருந்து விரை­வாக மீண்டு வர பாரம்பரிய சீன மருத்­துவ முறை­தான் துணை நின்­றது என்று குறிப்­பிட்­டுள்ள அன்­பு­மணி, சென்­னை­யில் இப்­போ­தும் சில கிரு­மித்­தொற்று சிகிச்சை மையங்­களில் உள்ள நோயா­ளி­க­ளுக்கு சித்த மருத்­து­வம் வழங்­கப்­ப­டு­வ­தா­கச் சுட்­டிக்­காட்டி உள்­ளார்.

அந்த மை­யங்­களில் உள்­ள­வர்­கள் மற்ற மையங்­களில் உள்­ள­வர்­களை விட விரை­வாக குண­ம­டைந்து வீடு திரும்­பு­வ­தா­க­வும், கொவிட்-19 நோய்க்கு இன்­னும் மருந்து கண்­டு­பி­டிக்­கப்­ப­டாத நிலை­யில், கிடைக்­கும் வாய்ப்­பு­கள் அனைத்­தை­யும் பயன்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டும் என்­றும் அன்­பு­மணி கேட்­டுக் கொண்­டுள்­ளார்.

"சென்­னை­யில் உள்ள தாம்­ப­ரம் சித்த மருத்­துவ நிறு­வ­னம் கண்டு­பி­டித்­துள்ள சிகிச்சை முறை நிரூ­பிக்­கப்­பட்­டது என்­ப­தால் அதைப் பயன்­ப­டுத்தி, அதிக எண்­ணிக்­கை­யி­லான மக்­களை விரை­வா­கக் குணப்­ப­டுத்த வேண்­டும்.

"கிருமித்தொற்றைப் போக்கும் இந்த சிகிச்சை முறை வெற்றி பெற்­றால் உலக அள­வில் தமி­ழர்­க­ளின் மருத்­துவ முறைக்கு பெரும் புக­ழும், அங்­கீ­கா­ர­மும் கிடைக்­கும்," என அன்­பு­மணி ராம­தாஸ் தமது அறிக்கை வழி தமி­ழக அர­சுக்கு வேண்­டு­கோள் விடுத்­துள்­ளார்.