சென்னையில் 20,000 போலிசார் குவிப்பு; முக்கிய பணிகளுக்கு விலக்கு

2 mins read
65434572-4f65-498b-b968-e62a2fdf8684
சென்னையில் விதிக்கப்பட்டுள்ள புதிய ஊரடங்கின்படி பொது­மக்­கள் பிற இடங்­க­ளுக்கு மோட்­டார் சைக்­கிள், கார்­களில் செல்­ல­ தடை விதிக்­கப்­பட்டுள்­ளது. படம்: ஏஎப்பி - அருண் சங்கர் -

சென்னை: சென்னை, காஞ்­சி­பு­ரம், திரு­வள்­ளூர், செங்­கல்­பட்டு ஆகிய நான்கு மாவட்­டங்­க­ளி­லும் நேற்று­ முதல் இம்­மா­தம் 30ஆம் தேதி வரை­யி­லான ஊர­டங்கு உத்­த­ரவு நடப்­புக்கு வந்­தது.

இந்த ஊரடங்கின்போது கட்டுப்பாடுகளை அலட்சியத்துடன் மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை களை எடுக்கும் வகையில் சென்னையில் 20,000 போலி­சார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் சோத­னைச் சாவ­டிப் பணி­கள், சுற்­றுக்­கா­வல் பணி­கள் உள்ளிட்ட பணி­களிலும் ஈடுபடுத்­தப்­பட்­டுள்­ள­னர்.

மொத்தம் 288 இடங்­களில் சோத­னைச் சாவ­டி­களை அமைத்து வாக­னச் சோத­னை­யில் ஈடு­பட்டு வரும் போலி­சார், கட்­டுப்­பா­டு­களை மீறும் வாக­னங்­கள் பறி­மு­தல் செய்­யப்­படும் என்­றும் எச்­ச­ரித்­துள்­ள­னர்.

அத்­து­டன், தேவை­யின்றி வெளி­யில் சுற்­று­ப­வா்­க­ளை­யும் கைது செய்து வரு­கின்­றனா்.

சென்­னை­யில் அண்ணா சாலை, கத்­திப்­பாரா பகு­தி­களில் உள்ள மேம்­பா­லங்­களும் காம­ரா­ஜர் சாலை உள்­ளிட்ட முக்­கிய சாலை­களும் அடைக்­கப்­பட்­டுள்­ளன.

ஊர­டங்­கின்­போது கட்­டுப்­பாடு களைப் பின்­பற்­றா­மல் அதை உடைத்­தெ­றி­வ­தால்­தான் கொரோனா கிரு­மிப் பர­வல் ஒரு கட்­டுக்­குள் வரா­மல் சென்­னை­யில் நாளும் அதி­க­ரித்து வரு­வ­தாக குற்­றச்­சாட்­டு­கள் உள்ளன.

இந்­நி­லை­யில், சென்னை நக­ரம் இப்­போது போலிஸ் கண் காணிப்பு வளை­யத்­துக்­குள் கொண்டு வரப்­பட்­டுள்­ளது.

இருப்­பி­னும், இந்த ஊர­டங்­கின் போது சில அத்­தி­யா­வ­சி­யப் பணிகளுக்கு விதி­வி­லக்­கும் அளிக்­கப்­பட்­டுள்­ளது.

ஊர­டங்கு நேரத்­தில் மருத்­துவ மனை­கள், மருத்­து­வப் பரி­சோ­த­னைக் கூடங்­கள், மருந்­த­கங்­கள் செயல்­ப­ட­வும் 'ஆம்­பு­லன்ஸ்', அம­ரர் ஊர்தி சேவை­கள் இயங்­க­வும் அனு­மதி அளிக்­கப்­பட்டு உள்­ளது.

அத்­து­டன் அவ­சர மருத்­துவ தேவை­க­ளுக்கு மட்­டும் தனி­யார் வாக­னங்­கள், ஆட்டோ, டாக்சி போன்­ற­வற்றை பயன்படுத்திக் கொள்ள அனு­மதி தந்துள்­ள­னர்.

ஆனால், வாடகை ஆட்டோ, டாக்சி, தனியாா் வாக­னங்­க­ளைப் பயன்­ப­டுத்த அனு­மதி இல்லை.

பொது­மக்­கள் பிற இடங்­க­ளுக்கு மோட்­டார் சைக்­கிள், கார்­களில் செல்­ல­ தடை விதிக்­கப்­பட்டுள்­ளது.

அத்­தி­யா­வ­சி­யப் பொருட்­களை வாங்க விரும்­பும் மக்­கள் தங்­கள் பகு­தி­களில் இருந்து 2 கிலோ மீட்­டர் தொலை­வுக்­குள் இருக்­கும் கடை­க­ளுக்கு நடந்­து­சென்று வாங்­கி­வர அனுமதி தந்துள்ளனர்.

காய்­கறிக் கடை­கள், மளி­கைக் கடை­கள் தனிநபா் இடை­வெ­ளி­யுடன் காலை 6 மணி முதல் பிற்­பகல் 2 மணி வரை செயல்­பட அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

இந்த ஊர­டங்கு குறித்து சென்னை நகர போலிஸ் ஆணை­யர் ஏ.கே.விஸ்­வ­நா­தன் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­ய­போது, "பொது­மக்­கள் அரு­கில் உள்ள கடை­க­ளுக்கு நடந்து சென்று பொருட்­களை வாங்­கி­வர வேண்­டும். கட்­டுப்­பாட்டை மீறி வாக­னங்­களில் சென்­றால் வாக­னங்­கள் பறி­மு­தல் செய்­யப்­படும்.

"சென்னை நகர எல்­லை­யைத் தாண்டி பணிக்­குச் சென்றுவரும் ஊழியர்­கள், இதுபோல் தின­சரி சென்­று­வர அனு­மதி இல்லை. வேலை பார்க்­கும் நிறு­வ­னத்­தி­லேயே அவர்­கள் தங்­கிக்­கொள்ள வேண்­டும்," என்று தெரிவித்துள்ளார்.