சென்னை மாநகராட்சி: இம்மாதம் 30ஆம் தேதி வரை மீன், இறைச்சி, கோழிக் கடைகள் திறக்கப்படாது

சென்னை மாநகராட்சி: இம்மாதம் 30ஆம் தேதி வரை மீன், இறைச்சி, கோழிக் கடைகள் திறக்கப்படாது

2 mins read
9a06461d-6e20-460c-9f50-fbcd43cd9a77
படம்: ஊடகம் -

சென்னை: மக்­கள் அதி­கம் கூடும் இடங்­களில் சந்­தை­யும் ஒன்று. இப்­படி கூட்­டம் குவி­வ­தால் கிரு­மி­யும் அதி­கம் பர­வு­கிறது.

இதைத் தடுக்­கும் வகை­யில் மீன், கோழி, இைறச்சி விற்­பனை செய்­யும் கடை­கள் ஜூன் 30 வரை திறக்­கப்­ப­டாது என்று சென்னை மாந­க­ராட்சி தெரி­வித்­துள்­ளது.

தமி­ழ­கத்­தில் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றின் தாக்­கத்­துக்கு சென்னை மாந­க­ரம் அதிக பாதிப்­புக்கு ஆளாகி உள்­ளது.

நாளும் அதி­க­ரித்து வரும் இக் கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­தும் வகை­யில் சென்னை, திரு­வள்­ளூர், காஞ்­சி­பு­ரம், செங்­கல்­பட்டு ஆகிய நான்கு மாவட்­டங்­க­ளி­லும் முழு ஊர­டங்கு நேற்று 19ஆம் ேததி முதல் அம­லுக்கு வந்­துள்­ளது.

இதை­ய­டுத்து, அத்­தி­யா­வ­சிய தேவை­யைத் தவிர்த்து மக்­கள் வெளியே செல்­வ­தற்கு தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில் இறைச்சி, மீன் கடை­களும் செயல்­ப­டாது என சென்னை மாந­க­ராட்சி அறி­வித்­துள்­ளது.

இது­தொ­டர்­பாக வெளி­யி­டப்­பட்­டுள்ள அறிக்­கை­யில், "சென்னை மாந­க­ராட்சி கட்­டுப்­பாட்­டில் பெரம்­பூர், வில்­லி­வாக்­கம், கள்­ளிக்­குப்­பம், சைதாப்­பேட்டை ஆகிய நான்கு இறைச்­சிக் கூடங்­கள் இயங்கி வரு­கின்­றன.

"கிருமிப் பர­வ­லைத் தடுக்கும் வகையில் இந்த ஊர­டங்கு சம­யத்­தில் இந்த நான்கு இறைச்­சிக் கூடங்­களும் சென்னை மாந­க­ராட்சி எல்­லைக்­குட்­பட்ட பகு­தி­களில் செயல்­ப­டாது.

"அத்­து­டன் அனைத்து கோழி, ஆடு, மாடு, இறைச்சி, மீன்­க­டை­களும் ஜூன் 19 முதல் ஜூன் 30 வரை முழு­மை­யாக மூடப்படும். இதற்கு மக்­களும் வியா­பா­ரி­களும் ஒத்­து­ழைப்பு வழங்­க­வேண்­டும்," என்று கூறப்­பட்­டுள்­ளது.

சென்னையில் உள்ள சந்தையில் மீன் கடையை வைத்து நடத்தும் பெண்கள்.

கொரோனா கிருமிப் பரவலைத் தடுக்கும் வகையில் சென்னை மாந­க­ராட்சி எல்­லைக்­கு உட்­பட்ட பகு­தி­களில் அனைத்து கோழி, ஆடு, மாடு, இறைச்­சி, மீன்­ க­டை­களும் நேற்றுமுதல் வரும் ஜூன் 30ஆம் தேதி வரை முழு­மை­யாக மூடப்­ப­டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

படம்: ஊடகம்