சென்னையில் 2.10 லட்சம் பேருக்கு பரிசோதனை

சென்னையில் 2.10 லட்சம் பேருக்கு பரிசோதனை

1 mins read
be487394-a1f9-4763-93df-4fa222094556
சென்னையில் இதுவரை 37,070 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 19,000க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். படம்: ஏஎப்பி -

சென்னை: சென்னையில் 2.10 லட்சம் பேருக்கு கிருமித்தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தி யாளர்களிடம் கூறுகையில், "கடந்த மூன்று மாதங்களில் சென்னையில் 2.10 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. வீடுவீடாகச் சென்று 17,011 பேரை பரிசோதனை செய்ததில் 6,000க்கும் மேற்பட்டோருக்கு தொற்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

சென்னையில் இதுவரை 37,070 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 19,000க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

16,000க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை இத்தொற்றால் 501 பேர் பலியாகியுள்ளனர்," என்றார்.