சென்னை: 7,801 வீதிகளில் கிருமித்தொற்று

சென்னை: 7,801 வீதிகளில் கிருமித்தொற்று

1 mins read
2d11ec07-8c73-4183-b8a1-568a893e43b0
சென்னை, தண்டையார்பேட்டை மண்டலத்தில் 4,500 பேரிடம் உள்ள தொற்று, 973 தெருக்களில் பரவியுள்ளது. தேனாம்பேட்டை யில் 941 தெருக்களில் 4,300 பேருக்கு பரவி உள்ளது என்று கூறப்படுகிறது. எனவே மருத்துவ ஊழியர்கள் நடமாடும் மருத்துவ வாகனம் மூலம் தண்டையார் பேட்டை, கோடம்பாக்கம், திருவிக நகர் ஆகிய மண்டலங்களில் வீதி வீதியாகச் சென்று சோதனை மேற்கொள்கின்றனர். படம்: ஏஎப்பி -

சென்னை: கொவிட்-19 கிருமித்தொற்றுப் பரவலால் சென்னையில் உள்ள 7,801 தெருக்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.

சென்னையில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் ராயபுரத்தில் உள்ள 1,744 தெருக்களில் 904ல் இத் தொற்று உள்ளது. அதில் 146 தெருக்களில் மொத்த பாதிப்பு 5,000ஐ கடந்து உள்ளது.

தண்டையார்பேட்டை மண்டலத்தில் 4,500 பேரிடம் உள்ள தொற்று, 973 தெருக்களில் பரவியுள்ளது. தேனாம்பேட்டை யில் 941 தெருக்களில் 4,300 பேருக்கு பரவி உள்ளது.

கோடம்பாக்கம் மண்டலத்தில் 847 தெருக்களில் 3,800 பேருக்கு இத்தொற்று உள்ளது. அண்ணா நகரில் 994 தெருக்களில் 3,600 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருவிக நகர் மண்டலத்தில் 693 தெருக்களில் 3,100 பேருக்கு மேல் உறுதி யாகி உள்ளது. 15 மண்டலங்களில் இருக்கும் 39,000 தெருக்களில் 31,000 தெருக்களில் கொரோனா இல்லை என்று கூறப்பட்டு உள்ளது.