சென்னை: தமிழகத்தில் நாளும் கொவிட் 19 கிருமித் தொற்று பரவி வருவது அதிகரித்து வருகிறது.
நாட்டில் மகாராஷ்டிராவை அடுத்து இரண்டாம் இடத்தில் தமிழகம் இக்கிருமித் தொற்றால் பாதிக்கப்பட் டுள்ளது. இம்மாநிலத்தில்
இத்தொற்றின் வேகம் 55, 000 பேரை நெருங்கி உள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், "தமிழகத்தில் இதுவரை மொத்தம் 8.27 லட்சம் மாதிரிகள் கொரோனா கிருமித்தொற்று பரிசோத னைக்கு உட்படுத்தப் பட்டுள்ளன. அதில் 54,449 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அவா்கள் அனைவரும் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா். வெள்ளிக்கிழமை மட்டும் 2,115 பேருக்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதில் சென்னையில் 1,322 போ் பாதிக்கப்பட்டு உள்ளனா். மாநிலத்தில் கிருமி பாதிப்பால் 666 பேர் பலியாகியதில் சென்னையில் 529 போ் உயிரிழந்துள்ளனர்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

