பட்டப்பகலில் கொள்ளை; ஐந்து முகமூடி திருடர்கள் சிக்கினர்

பட்டப்பகலில் கொள்ளை; ஐந்து முகமூடி திருடர்கள் சிக்கினர்

1 mins read
270563b2-e97f-40ce-8f47-7c04b3906c48
திண்­டுக்­கல் மாவட்­டத்தின் சுக்­காம்­பட்­டி­யில் ஆலய நிர்­வாகி துரை ஆதித்­யன் என்பவர் வீட்டில் ஏழு பேர் கொண்ட முகமூடிக் கும்பல் ஒன்று பட்டப்பகலில் திடீரென்று ஒரு வீட்டுக்குள் நுழைந்து, குடும்ப உறுப்பினர்களிடம் கத்தி, அரிவாளைக் காட்டி நகை, பணத்தை தரும்படி மிரட்டியது. கோவில் நிர்வாகியின் கையைக் கட்டி, அவரை சோபாவில் அமர வைத்துவிட்டு 100 பவுன் நகைகள், ரூ.35 லட்சம் பணத்தைக் கும்பல் கொள்ளை அடித்துச் சென்றது. படம்: ஊடகம் -

திண்­டுக்­கல்: வாஸ்து பார்ப்­ப­வர் ஒரு­வ­ரது வீட்­டில் பட்­டப்­ப­க­லில் கொள்ளை அடித்­து­விட்டு தப்­பிச் சென்ற ஆறு பேர் கொண்ட முக­மூடி கும்­பலைப் போலி­சார் 5 மணி நேரத்­தில் பிடித்­துள்­ள­னர்.

திண்­டுக்­கல் மாவட்­டம், அக­ரம் அருகே உள்ள சுக்­காம்­பட்­டி­யில் வாஸ்­தீஸ்­வ­ரர் என்ற ஆல­யம் உள்­ளது.

இந்த ஆல­யத்­தின் அரு­கில் குடி­யி­ருக்­கும் ஆலய நிர்­வாகி துரை ஆதித்­யனை வாஸ்து பார்ப்­பது, குறி­கேட்­பது போன்ற காரி­யங்­க­ளுக்­காக அர­சி­யல் பிர­மு­கர்­கள் நாடி வரு­வர் என்­றும் கூறப்­ப­டு கிறது.

இந்­நி­லை­யில், ஆதித்­யன் வீட்­டுக்­குள் பட்­டப் பக­லில் ஏழு பேர் கொண்ட முக­மூடி கும்­பல் நுழைந்­தது.

ஆதித்­த­னை­யும் அவ­ரது மனைவி, மகன், மகள், மரு­ம­கன் உள்ளிட்ட அனை­வ­ரை­யும் கத்தி, அரி­வாள் உள்­ளிட்ட ஆயு­தங்­களைக் காட்டி மிரட்டி, அவர்­க­ளைக் கட்­டிப்­போட்டு­விட்டு 100 பவுன் நகை­யை­யும் ரூ.35 லட்­சம் பணத்­தை­ யும் கொள்ளையடித்­துக் கொண்டு தப்பிச் சென்றது அந்தக் கும்பல்.

இந்­த சம்­ப­வம் தொடர்­பில் வேட­சந்­தூர் காவல்­து­றை­யி­னர் தங்­கள் விசா­ர­ணை­யை­யும் தேடு­தல் வேட்­டை­யை­யும் முடுக்­கி­விட்­ட­னர்.

இதைத்­தொ­டர்ந்து கொள்­ளைச் சம்­ப­வம் நடந்த 5 மணி நேரத்­துக்­குள் கொள்­ளை­யர்­களில் ஐவர் கைது செய்­யப்­பட்­ட­னர்.

கொள்­ளை­ய­டித்த 53 பவுன் நகை­கள், ரூ.35 லட்­சம் பணத்தை அவர்­க­ளி­டம் இருந்து மீட்­ட­னர். மற்ற இரு கொள்­ளை­யர்­க­ளைப் போலி­சார் தேடி வரு­கின்­ற­னர்.