'எவ்வளவு மதிப்பெண் பெற்றாலும் மாணவர்கள் தேர்ச்சிதான்'

'எவ்வளவு மதிப்பெண் பெற்றாலும் மாணவர்கள் தேர்ச்சிதான்'

1 mins read
2798470f-c42b-44c2-a569-3092350bdfe4
முதல்வர் எடப்பாடி பழனிசாமி -

சென்னை: தமிழகத்தில் பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவா்கள் காலாண்டு, அரையாண்டு தோ்வுகளில் எத்தனை மதிப்பெண் பெற்றிருந்தாலும் தோ்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவா் என தோ்வுத்துறை இயக்குநா் மு.பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் கொரோனா கிருமித் தொற்றின் தாக்கத்தால் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தோ்ச்சி பெற்ற தாக தமிழக முதல்வர் பழனிசாமி அண்மையில் அறிவிப்பு வெளியிட்டார்.

பிளஸ் 1 வகுப்புக்கான விடுபட்ட பாடங்களான வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் பொதுத்தோ்வுகளும் ரத்து செய்யப்பட்டன.

அத்துடன் மாணவா்களின் காலாண்டு, அரையாண்டு தோ்வுகளில் பெற்ற மதிப்பெண்கள், வருகைப் பதிவேடு ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது. அதாவது காலாண்டு, அரையாண்டு தோ்வு மதிப்பெண்கள் அடிப்படையில் 80% மதிப்பெண்களும் வருகைப் பதிவேடுக்கு 20% மதிப்பெண்களும் வழங்கப்பட உள்ளன.

இதற்காக மாணவா்களின் காலாண்டு, அரையாண்டு தோ்வு விடைத்தாள்கள், மதிப்பெண் பட்டியலை அனுப்பும்படி பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இதற்கிடையே காலாண்டு, அரையாண்டுத் தோ்வுகளில் தோ்ச்சி பெறாத மாணவா்களின் நிலை என்ன என்பது குறித்து கேள்வி எழுந்தது.

இந்நிலையில், பத்தாம் வகுப்பு மாணவா்கள் தங்களது தேர்வுகளில் எத்தனை மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் தோ்ச்சி பெற்றதாக அறிவிக்கப் படுவா் என மு.பழனிசாமி தெரிவித்துள்ளாா்.