சுடச் சுடச் செய்திகள்

மாமல்லபுரம் அருகே கடலில் மிதந்த டிரம்முக்குள் ரூ.100 கோடி மதிப்பிலான போதைப்பொருள்

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள கொக்கிலமேடு கடற்கரையில் கரையொதுங்கிய தகர டிரம்மில் இருந்த 78 பொட்டலங்களில் சீன மொழியிலும் ஆங்கிலத்திலும் அச்சிடப்பட்டிருந்தது.  பார்க்க வித்தியாசமான இருந்ததால் அது குறித்து மீனவர்கள் போலிசுக்கு தகவல் அளித்தனர்.

அந்த பொட்டலங்களின் மீது ‘ரீபைன்ட் சைனீஸ் டீ’ என சீன மொழியிலும், ஆங்கிலத்திலும் அச்சிடப்பட்டு இருந்தது. ஒரு பொட்டலத்தை பிரித்து சோதனை செய்தனர்.

அதுபோதை பொருளாக இருக்கும் என சந்தேகம் அடைந்த கடலோர காவல் படை போலிசார் 78 பொட்டலங்களையும் பரிசோதனைக்காக சென்னையில் உள்ள அறிவியல் ஆய்வு பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு நடத்தப்பட்ட ஆய்வில் அது ஹெராயின் வகையை சேர்ந்த ‘மெத்தாம்பிடைமின்’ என்ற ஒரு வகை போதை பொருள் என்பது தெரியவந்தது.

சுமார் 78 கிலோ அளவிலான இந்த போதை பொருட்களின் மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் என்று போலிசார் தெரிவித்தனர்.

கடலில் ஏதாவது மர்ம பொருள் மிதந்து வந்தால் உடனடியாக போலிசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அதனைத் திறந்து பார்க்ககூடாது என்றும் போலிசார் அந்தப் பகுதி மீனவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

அந்தப் பகுதியில் மர்ம நபர்களின் நடமாட்டம் குறித்து போலிசார் கண்காணித்து வருகின்றனர்.

 

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon