மரணத்தின் பிடியில் சிக்கிய தெற்கு மாவட்டங்கள்

மரணத்தின் பிடியில் சிக்கிய தெற்கு மாவட்டங்கள்

1 mins read
3488c4d1-50d2-45d6-b03b-9d2ac8d617a2
-

மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் போன்ற தென் மாவட்டங்களில் கிருமித்தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துவிட்டதால் முதல்வர் தனிக்கவனம் செலுத்த வேண்டு மென மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்து உள்ளார். முதல் தொற்று உறுதி செய்யப்பட்டதில் இருந்து 92 நாட்களில் ஏற்பட்ட பாதிப்பு தற்போது கடந்த 13 நாட்களில் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ள அவர், இன்னும் இரு வாரங்களில் கொரோனா கிருமித்தொற்றின் வேகம் தென் மாவட்டங்களில் தீவிரமடைய வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளார்.