திருமண நிகழ்ச்சிக்கு 'ஆர்டர்' செய்யப்பட்ட முகக்கவசம்

திருமண நிகழ்ச்சிக்கு 'ஆர்டர்' செய்யப்பட்ட முகக்கவசம்

1 mins read
01107c5d-c75f-42a4-beb7-6ec065022414
மூன்று அல்லது நான்கு கிராம் தங்கத்தில் செய்யப்பட்ட முகக் கவசம். படம்: சமூக ஊடகம் -

சென்னை: திண்­டி­வ­னத்­தைச் சேர்ந்த சதீஷ் என்­ப­வர் திரு­மண நிகழ்ச்­சி­க­ளுக்­காக தங்­கத்­தில் முகக்­க­வ­சம் செய்து விற்­பனை செய்து வரு­கி­றார். இது குறித்து அவர் 'டிக் டாக்'கில் காணொ­ளி­க­ளைப் பதி­விட்­டுள்­ளார்.

தங்க முகக்­க­வ­சம் குறித்து அவர் தெரி­விக்­கை­யில், "சுத்­த­மான 24 காரட் தங்­கத்­தில் இந்த முகக்­க­வ­சத்தை உரு­வாக்கி உள்­ளோம். ஒரு திரு­மண நிகழ்ச்­சிக்­காக இவ்­வாறு செய்து தரு­மாறு கேட்­டார்­கள்.

"இத­னைப் பயன்­ப­டுத்­திய பிறகு வீணா­கி­வி­டாது. தங்க முகக்­க­வ­சத்தை உருக்கி சங்­கிலி, மோதி­ரம் என்று நமக்­குத் தேவை­யான நகையை செய்­து­கொள்­ள­லாம்," என்று குறிப்­பிட்­டி­ருக்­கி­றார்.

மூன்று கிராம், நான்கு கிராம் என்று வெவ்­வேறு எடை அள­வி­லும் வித்­தி­யா­ச­மான வடி­வங்­க­ளி­லும் முகக் ­க­வ­சங்­களை தயா­ரித்து வரு­வ­தாக அவர் தெரி­வித்­துள்­ளார்.

கிரு­மி­யி­லி­ருந்து பாது­காப்­ப­தற்­கான முகக்­க­வ­சத்­தின் முக்கி­யத்­து­வத்தை மறந்து அதை அலங்­கா­ரப் பொரு­ளாக மாற்­றி­விட்­டார்­களே என்று சமூக ஊட­கங்­களில் பல­ரும் வருத்­தத்தையும் கண்டனத் தையும் பதிவிட்டு வருகின்றனர்.

அதே நேரம் திருமணத்திற்கு மட்டும் பயன்படும் புதுமையான முகக்கவசம் என்று சிலர் வர வேற்றுள்ளனர்.