சென்னை : தமிழக மக்களை அதிர்ச்சி அடைய வைத்த உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலை மேல்முறையீட்டு வழக்குக்கான தீர்ப்பை இன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழங்கினர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான கௌசல்யாவின் தந்தை சின்னசாமியை விடுதலை செய்த நீதிபதிகள் , மற்ற ஐவருக்கு விதிக்கப்பட்ட தூக் குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து தீர்ப்பளித்தனர்.
இந்த தீர்ப்பு தொடர்பாக குன்னூரில் செய்தியாளர்களிடம் பேசிய சங்கரின் மனைவி கௌசல்யா , "இந்த தீர்ப்பின் மூலம் எங்களுக்கு அநீதிதான் கிடைத்துள்ளது. சங்கர் சிந்திய ரத்தத்திற்கு இன்னும் நீதி கிடைக்க வில்லை . சின்னசாமியும் அன்ன லட்சுமியும் குற்றவாளி இல்லை என்றால் சங்கர் உயிருடன் இருந்து என்னுடன் வாழ்ந்திருப்பார். நாங்கள் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்கு செல்வோம்," என்று கூறினார்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த கௌசல்யா என்பவர் தன்னுடன் படித்த உடுமலைப் பேட்டையைச் சேர்ந்த சங்கர் என்ற வாலிபரை காதலித்து கடந்த 2015ஆம் ஆண்டு கலப்புத் திருமணம் செய்துகொண்டார். இதற்கு கெளசல்யா குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 2016ஆம் ஆண்டு உடுமலையில் சங்கரை ஒரு கும்பல் வெட்டிக் கொன்றது. இதை தடுக்க வந்த கௌசல்யாவுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. பலத்த காயங்களுடன் கௌசல்யா உயிர் தப்பினார்.
'சிசிடிவி' காட்சிகளில் பதிவான இந்த படுகொலை தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக் கில் கௌசல்யாவின் தந்தை உள்ளிட்ட ஆறு பேருக் கு 2017 டிசம்ப ரில் திருப்பூர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்ததை எதிர்த் து, அவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதி மன்றத் தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட ன.
கௌசல்யாவின் தாய் அன்ன லட்சுமி, தாய்மாமன் பாண்டித் துரை , பிரசன்னா ஆகியோர் விடு விக்கப்பட்டப்பட்டது செல்லும் எனவும் நீதிமன்ற ம் கூறியுள்ளது.

