ஊரடங்கு உத்தரவு நடப்புக்கு வந்தது முதலே கொரோனா கிருமித் தொற்றைக் கட்டுப்படுத்த அனைத்து தூய்மைப் பணியாளர்களும் அரும்பாடுபட்டு வருகின்றனர். திருப்போரூரில் ஊரடங்கு சமயத்திலும் வீடுவீடாகச் சென்று குப்பைகளைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்ட சாந்தி, மல்லிகா என்ற இவ்விரண்டு பணியாளர்களையும் அங்குள்ள பொதுமக்கள் ரூபாய் நோட்டு மாலை அணிவித்து, பாத பூஜை செய்து கௌரவித்துள்ளனர். இந்தப் பணியாளர்கள் கிருமித்தொற்றுக்கு பயந்து தூய்மைப் பணியை நிறுத்தியிருந்தால் டெங்கி, சிக்குன்குனியா போன்ற நோய்களாலும் மக்கள் அவதிப்படும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. படம்: தமிழக ஊடகம்
தூய்மைப் பணியாளர்களுக்கு ரூபாய் மாலையுடன் பாத பூஜை
1 mins read
படம்: ஊடகம் -