மதுரை: மதுரையில் இன்று முதல் வரும் 30ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. ஊரடங்கு காலத்தில் ஆட்டோ, டாக்சி உள்ளிட்ட வாகனங்களை இயக்க அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் 1 கி.மீ. தூரத்திற்குள் உள்ள கடைகளில் மட்டுமே அத்தியாவசிய தேவைக்குரிய பொருட் களை வாங்கிக்கொள்ள வேண்டும். தேநீர் கடை களுக்கு அனுமதி இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
மதுரையில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கிருமித்தொற்று பரவும் வேகம் அதிகரித்து வருவதால் மதுரையிலும் சென்னையைப் போலவே ஊரடங்கை அமல்படுத்த இருப்பதாக சமூக வலைத் தளங்களில் தகவல்கள் பரவி வந்தன.
காஞ்சிபுரம், ராணிப் பேட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் கிருமித்தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கையும் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கையும் இரு மடங்கு அதிகமானதால் முதல்வர் பழனிசாமி உடனே இதில் தலையிட வேண்டும் என்று லோக்சபா தொகுதி எம்.பி. சு.வெங்கடேசன் வலியுறுத்தி இருந்தார்.

