முதன்முறை: அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக கிருமி தொற்றியோர் கண்டறியப்பட்டனர்

முதன்முறை: அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக கிருமி தொற்றியோர் கண்டறியப்பட்டனர்

1 mins read
6a05c151-b9b9-4c80-abfc-fd89094036a6
சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி. படம்: ஊடகம் -

சென்னை: தமிழகத்தில் முதன்முறையாக அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக கொரோனா கிருமித் தொற்றியோர் கண்டறியப்பட்டுள்ளனர்.

தமி­ழ­கத்­தில் கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை 62 ஆயி­ரத்­தைக் கடந்­துள்­ளது.

தற்­போது சென்னை, காஞ்­சி­பு­ரம், செங்­கல்­பட்டு, திரு­வள்­ளூர் உள்­ளிட்ட 5 மாவட்­டங்­களில் முழு ஊர­டங்கு அம­லில் உள்­ளது. இந்­நி­லை­யில் பிற மாவட்­டங்­களில் தொற்­றுப் பர­வல் எந்­த­ளவு உள்­ளது என்­ப­தைத் தீவி­ர­மாக கண்­காணிக்­கும்­படி உயரதிகாரிகளுக்கு அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ள­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

தொற்­றுப் பர­வல் அதி­க­ரிப்­பது தெரியவந்­தால் மேலும் ஒன்­றி­ரண்டு மாவட்­டங்­களில் மீண்­டும் ஊர­டங்கு உத்­த­ரவு அமல்­ப­டுத்­தப்­பட வாய்ப்­புள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

நேற்று முன்­தி­னம் முதன்­மு­றை­யாக அனைத்து மாவட்­டங்­க­ளி­லும் புதி­தாக கிரு­மி தொற்­றி­யோர் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­னர். கட­லூ­ரில் 63 பேர், தூத்­துக்­கு­டி­யில் 62, காஞ்சிபுரத்­தில் 56, ராணிப்­பேட்­டை­யில் 52, திருச்­சி­யில் 51 பேருக்கு புதி­தாக கிருமி தொற்­றி­யுள்­ளது.

தமி­ழ­கத்­தில் கொரோனா கிரு­மித்­தொற்­றால் நேற்று முன்­தி­னம் ஒரே நாளில் 37 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர். இதை­ய­டுத்து பலி­யா­னோர் எண்­ணிக்கை 794 ஆக அதி­க­ரித்­துள்­ளது.

நேற்று முன்­தி­னம் புதி­தாக 2,710 பேருக்கு புதி­தாக கிருமி தொற்­றி­யி­ருப்­பது உறு­தி­யா­னது. இதை­ய­டுத்து பாதிக்­கப்­பட்­டோர் மொத்த எண்­ணிக்கை 62 ஆயி­ரத்­தைக் கடந்­துள்­ளது.

தமி­ழ­கத்­தில் இது­வரை 9 லட்­சத்து 19 ஆயி­ரம் பேருக்கு கொரோனா கிரு­மித் தொற்­றுக்­கான பரி­சோ­தனை நடத்­தப்­பட்­டுள்­ளது. நேற்று முன்­தி­னம் ஒரே நாளில் 25 ஆயி­ரம் பேருக்­குப் பரி­சோ­தனை செய்­யப்­பட்­ட­தாக சுகா­தா­ரத் துறை தெரி­வித்­துள்­ளது.