தீவிர நடவடிக்கை: ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

சென்னை: ஒவ்­வொரு மருத்­து­வ­மனை­யி­லும் சுவா­சக்­க­ரு­வி­க­ளு­டன் கூடிய படுக்கை வச­தி­களை அதி­க­ரிக்க வேண்­டும் என மாவட்ட ஆட்­சி­யர்­க­ளுக்கு தமி­ழக அர­சின் தலை­மைச் செய­லகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்­பாக ஆட்சியர்களுக்கு அவர் அனுப்­பி­யுள்ள கடி­தத்­தில், கிரு­மித்­தொற்­றுப் பர­வ­லைத் தடுக்க தீவிர நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டும் என குறிப்­பிட்­டுள்­ளார்.

தொற்­றுக்­கான அறி­கு­றி­கள் இருப்­ப­வர்­கள் வசிக்­கும் வீடு­கள் மற்­றும் அந்த தெருக்­கள் முழுமை யாக பரி­சோ­திக்­கப்­பட வேண்­டும் என்­றும் மக்­கள் நட­மாட்­டத்­துக்கு அதிக கட்­டுப்­பா­டு­கள் விதிக்க வேண்­டும் என்­றும் தலை­மைச் செய­லர் அறி­வு­றுத்தி உள்­ளார்.

கிரு­மித்­தொற்று பாதிப்பு கண்­ட­றி­யப்­பட்ட தெரு அல்­லது உள்­ளூர் பகு­தி­யில், காய்ச்­சல் பாதிப்பு அதி­க­ள­வில் இருந்­தால் அப்­ப­கு­தி­யில் நூறு விழுக்­காடு பரி­சோ­தனை செய்­யப்­பட வேண்­டும் என அவர் உத்­த­ர­விட்­டுள்­ளார்.

“மக்­கள் நெருக்கடி­யுள்ள பகு­தி­யில் வசிக்­கும் அபா­ய­க­ர­மான நிலை­யில் உள்ள குடும்­பங்­களை தனி­மைப்­ப­டுத்­தும் முகாம்­க­ளுக்கு மாற்ற வேண்­டும்.

“தொடர்பு கண்­ட­றி­தல், நோய்க் கட்­டுப்­பாட்டுப் பகுதி மற்­றும் தனி­மைப்­ப­டுத்­தல் மேலாண்மை ஆகி­ய­வையே நோயைக் கட்­டுப் படுத்­து­வ­தற்­கான முக்­கி­ய­மான செயல்­பாடு­கள்,” என தலை­மைச் செய­லர் மேலும் தெரி­வித்­துள்­ளார்.

முகக்­க­வ­சம் அணி­வது கட்­டா­யம் என்­ப­தால் விதி­மீ­றல்­க­ளுக்கு அப­ரா­தம் விதிக்­கப்­பட வேண்­டும் என்­றும், தாம­த­மின்றி நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டும் என்­றும் அவர் கூறி­யுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!