விஜயபாஸ்கர்: சுயக் கட்டுப்பாடு மிக முக்கியம்

விஜயபாஸ்கர்: சுயக் கட்டுப்பாடு மிக முக்கியம்

1 mins read
4ea8c71f-89e0-411f-a4f6-4b0fc179810a
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர். கோப்புப்படம் -

சென்னை: தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், "கொரோனாவைக் கட்டுப்படுத்த சுய கட்டுப்பாடு மிக முக்கியம்," என தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

"நாம் அனைவரும் கண்ணுக்குத் தெரியாத கொரோனா என்ற கிருமியை எதிர்த்துப் போராடிக்கொண்டி ருக்கிறோம். இக்கிருமியைத் தடுக்க நாம் இரு விஷயங் களைக் கடைப்பிடிக்க வேண் டும். வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணிய வேண்டும். வீட்டிற்கு வந்ததும் கைகால்களை சோப்பு போட்டு கழுவவேண்டும். இது நம் ஒவ்வொருவரின் உயிரையும் காப்பாற்றும். தடுப்பு மருந்து எதுவும் கண்டுபிடிக்க இயலா மல் உள்ள இத்தருணத்தில் இக்கிருமியை எதிர்த்துப் போராடுவதற்கு சுயக் கட்டுப் பாடு என்பது நமக்கு மிக முக்கியம்," என கூறியுள்ளார்.