அத்திப்பட்டு: கொரோனா நோயாளிகளை நான்கு பிரிவுகளாகப் பிரித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை அம்பத்தூர் மண்டலம், அத்திப்பட்டில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கும் பணி ெதாடர்பில் பிரகாஷ் நேற்று ஆய்வு செய்தார்.
அதன்பின்னர் அவர் செய்தி யாளர்களிடம் பேசியபோது, "கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் தங்களின் பாதிப்புக்கேற்ப நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவார்கள்.
"மூச்சுத் திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் அதிகம் உள்ளவர்கள் ராஜீவ் காந்தி போன்ற அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும்.
"மூச்சுத்திணறல் அறிகுறி குறை வாக உள்ளவர்களும் காய்ச்சல் மட்டும் உள்ளவர்களும் கொரோனா சிகிச்சை மையத்துக்கு அனுப்பப்படுவார்கள்.
"மிகக் குறைவான அறிகுறி உடையவர்கள் தனிமைப்படுத்தும் மையங்களுக்கும் எந்த ஒரு அறிகுறியும் இன்றி கிருமித்தொற்று உள்ளவர்கள் அவர்களது வீடுகளிலும் தனிமைப்படுத்தப்படுவார்கள். இவர்கள் தொலைத்தொடர்பு தகவல் தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இப்படி சிகிச்சை அளிப்பது நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது," என்று கூறினார்.

