கொரோனா மருத்துவமனையாக மாறும் ராஜீவ் காந்தி மருத்துவமனை

சென்னை: சென்­னை­யில் அக் டோபர் மாதத்­தில் கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­படு வோரின் எண்­ணிக்கை உச்­சம் தொடும் என்று மருத்­துவ நிபு­ணர்­கள் எச்­ச­ரித்­துள்­ள­னர்.

இந்த சூழ்­நி­லை­யைச் சமா­ளிக்க சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்­து­வ­ம­னையை முற்­றி­லும் கொரோனா நோயா­ளி­க­ளுக்­கான மருத்­து­வ­ம­னை­யாக மாற்­றும் நட­வ­டிக்­கை­யில் அரசு அதி­கா­ரி­கள் ஈடு­பட்டு உள்­ள­னர்.

சென்­னை­யில் நாளுக்கு நாள் கொவிட்-19 கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­வோ­ரின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரும் நிலை­யில், அக் டோபர் மாதத்­தில் இந்­தப் பாதிப்பு உச்­சத்­தைத் தொடும் என்று எம்­ஜி­ஆர் மருத்­து­வப் பல்­க­லைக்­க­ழ­கம் அண்­மை­யில் ஆய்வு அறிக்கை வழி விவ­ரம் வெளி­யிட்­டது.

தமி­ழ­கத்­தில் சென்னை, திரு வள்­ளூர், காஞ்­சி­பு­ரம், செங்­கல்­பட்டு ஆகிய நான்கு மாவட்­டங்­க­ளி­லும் தினந்­தோ­றும் தொற்று பாதிப்பு அதி­க­ள­வில் கண்­ட­றி­யப்­பட்டு வரு­கிறது.

இருப்­பி­னும் தற்­போது அமல்­ப­டுத்­தப்­பட்­டுள்ள 12 நாள் ஊர­டங்கு கார­ண­மாக கொரோனா பர­வல் உச்­ச­ம­டை­வது இரு­வா­ரங்­கள் தள்­ளிப்­போ­கக் கூடும் என்­றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், திரு­வண்­ணா­மலை, மதுரை உள்­ளிட்ட பல்­வேறு மாவட்­டங்­க­ளி­லும் கடந்த சில நாட்­க­ளா­கவே கொரோனா கிரு­மித் தொற்­றுப் பர­வல் வேகம் எடுக்­கத் தொடங்­கி­யுள்­ளது.

அடுத்து வரும் நாட்­களில் பல்­வேறு மாவட்­டங்­களில் இந்த கொரோனா பர­வல் அதி­க­ரிக்க வாய்ப்­புள்­ள­தால் தமி­ழ­கத்­தில் ஜூலை மாத மத்­தி­யில் 2.75 லட்­சம் பேர் தொற்று பாதிப்­புக்கு ஆளாகியி­ருப்­பார்­கள் என்­றும் கணிக்­கப்­பட்­டுள்­ளது.

சென்­னை­யில் இம்­மாத இறு திக்­குள் 71,000 பேரும் தமி­ழ­கத்­தில் 1,22,000 பேரும் தொற்று பாதிப்­புக்கு ஆளாகி இருப்­பார்­கள்.

ஜூலை 15ஆம் தேதி­யில் சென்­னை­யில் 1.5 லட்­சம் பேரும் தமி­ழ­கம் முழு­வ­தும் 2,76,000 பேரும் கிரு­மி­யால் பாதிக்­கப்­பட்­டி­ருப்­பார்­கள் என்று பல்­க­லைக்­க­ழகத் துணை­வேந்­தர் சுதா சேஷய்­ய­னும் தொற்­று­நோய்த் துறை தலை­வர் சீனி­வா­சனும் தெரி­வித்­துள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!