ஈரானில் சிக்கித் தவிக்கும் 673 தமிழக மீனவர்களை மீட்க சிறப்பு கப்பல்

ஈரான் நாட்டில் உள்ள தமிழக மீனவர்களை தாயகத்துக்கு அழைத்து வர சிறப்பு கப்பல் ஒன்று அனுப்பப்படுவதாக தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, தமிழக அரசு இன்று (ஜூன் 25) வெளியிட்ட செய்தியில், “தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 700 மீனவர்கள் ஒப்பந்த அடிப்படையில் ஈரான் நாட்டில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.

“கொரோனா தொற்று காரணமாக அனைத்துலக அளவில் விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ஈரானில் மீன்பிடி தொழில் மேற்கொண்டு வந்த தமிழக மீனவர்கள் தாயகம் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.

“இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மூலம் ஈரானில் உள்ள தமிழக மீனவர்களை விரைவில் தமிழகம் அழைத்து வர அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள கடிதம் மூலம் தமிழக முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

“இதனைத்தொடர்ந்து, இந்திய அதிகாரிகள் ஈரானில் தங்கியுள்ள மீனவர்களை நேரில் சென்று சந்தித்து அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள், அத்தியாவசிய தேவைகள் மற்றும் பிற வசதிகள் கிடைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.

இந்நிலையில், ஈரானில் இருக்கும் தமிழக மீனவர்களை தமிழகம் அழைத்துவர சிறப்பு கப்பல் இன்று (ஜூன் 25) புறப்படவுள்ளது. இக்கப்பல் மூலம் தமிழகத்தினை சேர்ந்த 673 மீனவர்கள் விரைவில் தூத்துக்குடி துறைமுகம் வந்தடைவார்கள்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!