கொரோனாவைக் கட்டுப்படுத்த மதுரையில் தீவிர நடவடிக்கைகள்; நடமாடும் பரிசோதனை மையங்கள் அமைப்பு

கொரோனா கிருமித்தொற்று அதிகரித்து வருவதையொட்டி மதுரையில் இம்மாத இறுதி வரை பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவம் படித்த இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மதுரையில் களமிறங்கியுள்ளனர்.

ஐந்து தனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீடு திட்டம் மூலம் கொரோனா சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கொரோனா சிறப்பு கண்காணிப்பு அலுவலர் சந்திரமோகன் ஐஏஎஸ் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் தினமும் நூற்றுக்கணக்கில் மட்டுமே பாதிப்பு இருந்த நிலையில் தற்போது தினசரி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவதாக தினசரி தகவல்கள் வெளியாகின்றன.

மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. மதுரைக்கு அருகில் உள்ள பரவை சந்தையில் பலர் கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையமும் களத்தில் இறங்கியுள்ளது.

மதுரை மாவட்டத்தில் 88 காய்ச்சல் பரிசோதனை மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட கொரோனா சிறப்பு கண்காணிப்பு அலுவலர் சந்திரமோகன் கூறியுள்ளார்.

மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் இருக்கிறதா என சோதனை செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அந்த வகையில் 39 நடமாடும் காய்ச்சல் பரிசோதனை மையங்கள் செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது. 21 இடங்களில் கூடுதலாக 2,045 படுக்கை வசதிகள் செய்யப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!