சென்னை: தமிழகத்தில் வெள்ளி இரவுடன் ஒரேநாளில் 3,645 பேரை கொரோனா கிருமித்ெதாற்று பாதித்தது. இவர்களுடன் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 75,000ஐ நெருங்கியுள்ளது. ஒரே நாளில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் உள்பட 46 பேர் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் நாள்தோறும் புதிய உச்சம் தொடும் கிருமி பாதிப்பு தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், "தமிழகத்தில் 3,523 பேர், வெளிநாடுகளில் இருந்து வந்த 26 பேர், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 96 பேர் என மொத்தம் 3,645 பேருக்கு கிருமி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
"இதில் 2,211 ஆண்களும் 1,434 பெண்களும் அடங்குவர். இதில் 12 வயதுக்கு உட்பட்ட 152 குழந்தை களும் உள்ளனர். தற்போது தமிழ கத்தில் கொரோனா பாதிப்பு 74,622ஆக அதிகரித்துள்ளது.
"கிருமிப் பரவலால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 957ஆக அதிகரித்துள்ளது. அத்து டன் 1,358 பேர் மீண்டனர். இதுவரையில் 41,357 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 32,305 பேர் சிகிச்சை பெற்று வரு கின்றனர்.
"சென்னையில் கிருமித்தொற் றால் பாதிக்கப்பட்டவர்கள் எண் ணிக்கை 49,690ஆக அதிகரித் துள்ளது. இங்கு 28,823 பேர் இத் தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். தற்போதைய நிலையில் 20,136 பேர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரு கின்றனர். சென்னையில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 730 ஆக அதிகரித்துள்ளது," என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை வியாசர்பாடியில் உள்ள டாக்டர். அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் கொரோனாவிற்கு சித்த மருத்துவ சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு 12 அனுபவமிக்க மருத்துவர்கள் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவருகின்றனர்.
நோயாளிகளுக்கு கபசுரக் குடிநீர், ஆடாதொடை மணப்பாகு, தனிசதீ சூரணம், பிரமானந்த பைரவம் போன்ற சித்த மருந்துகளும் கொடுக்கப்படுகின்றன. மேலும் அவர்களுக்கு மூச்சுப்பயிற்சியும் சித்தா முறையில் யோகா பயிற்சியும் அளிக்கப்படுகின்றன.
சுகாதாரத்துறை செயலர் ஜே. ராதாகிருஷ்ணன் பேசுகையில், "கேரளாவில் சித்த மருத்துவ முறை யைக் கடைப்பிடித்து கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதைப் போலவே, தற்போது தமிழ்நாட்டிலும் கடைப்பிடிக்கப்படுகிறது.
"இதனால் கொரோனா நோயாளிகளுக்கு இன்னும் நல்ல முறையில் சிகிச்சை அளிக்கமுடியும். மிக விரைவாகவே அவர்களை குணப்படுத்தமுடியும் என நம்புகிறோம்," என்று அவர் கூறியுள்ளார்.

