100 அடி நீள மண்டலா ஓவியம் தீட்டி சாதனை

மதுரை: உயிர் எழுத்­து­கள் 12, மெய் எழுத்­து­கள் 18, உயிர் மெய் எழுத்து கள் 216, ஆய்த எழுத்து 1 என ஆக­மொத்­தம் 247 தமிழ் எழுத்து களை­யும் மைய­மாக வைத்து மண்­டலா ஓவி­யத்தை 100 அடி நீளத்­துக்கு வரைந்து சாதனை புரிந்­துள்­ளார் மதுரை மாண­வர் ஒரு­வர்.

மண்­டலா ஓவி­யம் என்­பது நான்­காம் நூற்­றாண்டு காலத்து மிகப் பழ­மை­யான ஓவி­யம். இவை கணித சாஸ்­தி­ரங்­க­ளை­யும் தியான நுணுக்­கங்­க­ளை­யும் அடிப்­ப­டை­யா­கக் கொண்டு வரை­யக்­கூ­டி­யவை.

இந்த ஓவி­யங்­கள் வரை­வ­தால் மன அழுத்­தம் குறை­யும் என்­றும் சொல்­லப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், அ,ஆ,இ உயிர் எழுத்­து­களில் தொடங்கி தமி­ழின் 247 எழுத்­து­க­ளை­யும் தனது ஓவி யத்­தில் வடித்­துள்­ளார் மதுரை, புது விளாங்­கு­டி­யைச் சேர்ந்த 16 வயது ஹரீஷ் சக்தி என்ற மாண­வர்.

இந்த ஓவி­யத்­தில் திருக்­கு­றள், ஆத்­தி­சூ­டி­யும் இடம்­பெற்­றுள்­ளன.

பத்­தாம் வகுப்பு முடித்­துள்ள ஹரீஷ் சக்தி தனது கொரோனா விடு­மு­றையைப் பய­னுள்­ள­தா­கக் கழிக்க இந்த மண்­டலா ஓவி­யத்தை இணை­யம் வழி பயின்­றுள்­ளார்.

இந்த ஓவி­யத்தை சாத­னை­யாக்­கும் வகை­யில், இந்­திய சாதனைப் புத்­தக அமைப்­பின் அனு­ம­தி­யைப் பெற்று, கடந்த ஜூன் 24ஆம் தேதி முதல் ஓவிய முயற்­சி­யைத் தொடங்­கி­னார். கடந்த மூன்று நாட்­க­ளாக தின­மும் பத்து மணி நேர­மாக ஓவி­யத்தை வரைந்து வந்­த­வர் வெள்ளி இரவு இந்த சாதனை முயற்­சியை முடித்­துள்­ளார்.

சாதனை புத்­தக நிறு­வ­னம் வழங்­கிய கால அவ­கா­சத்­துக்கு முன்பே கொடுக்­கப்­பட்ட அள­வுக்­கும் கூடு தலாக அதா­வது 101 அடி நீளத்­துக்கு ஓவி­யம் வரைந்­துள்ளாா்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!