ஐந்தாவதாக ஒரு எம்எல்ஏவுக்கு தொற்று உறுதி

சென்னை: திமுகவைச் சேர்ந்த மேலும் ஒரு எம்எல்ஏவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. அவர்தான் செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதி திமுக எம்எல்ஏவான ஆர்.டி. அரசு. இவருடன் தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளான எம்எல்ஏக்களின் எண்ணிக்கை ஐந்தாகி உள்ளது.

ஆர்.டி. அரசு, சென்னை போரூரில் உள்ள மருத்துவ மனையில் சிகிச்சை பெறுகிறார்.

சேப்பாக்கம் திருவல்லிக் கேணி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் கொரோனா தொற்றால் பலியானார். திருப்பெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனி, கள்ளக்குறிச்சி திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன், உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.