சென்னை: தமிழகத்தில் ஊடகத் துறைையச் சார்ந்த ஒருவர் முதன்முதலாக கிருமித் தாக்கத்தால் உயிரிழந்துள்ளார்.
ராஜ் தொலைக்காட்சியின் மூத்த ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி வந்தவர், வேல்முருகன். 40 வயதாகும் இவருக்கு கடந்த 15 நாட் களுக்கு முன்னர்தான் கிருமித் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து சென்னை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று அதிகாலை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அவருக்கு மனைவியும் ஒரு மகனும் உள்ளனர்.
வேல்முருகன் உயிரிழந்த தற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

