காய்கறி, பழங்கள் வீடுகளுக்கு விநியோகம்

1 mins read
f92dfdc9-2852-4c59-960e-feedd4de195f
கோப்புப்படம்: ஊடகம் -

சென்னை: சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் குடியிருக்கும் மக்களுக்கு காய்கறிகளும் பழங்களும் தோட்டக்கலைத் துறையின் சார்பில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

சென்னையின் பல்வேறு மண்டலங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், பொதுமக்கள் வெளியில் நடமாடுவதைக் குறைக்கும் வகையில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பழங்கள், காய்கறிகளை விநியோகிக்கும்படி கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, தோட்டக்கலை துறை வாயிலாக ஆங்காங்கே நடமாடும் காய்கறிக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தரமான காய்கறிகள், பழங்கள் குறைந்த விலையில் விற்கப்படுவதால் இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வருகிறது.