திருவள்ளூர் அருகே கூடையில் கிடந்த குழந்தை மீட்பு

திருவள்ளூர் அருகே கூடையில் கிடந்த குழந்தை மீட்பு

1 mins read
da97e9a0-ccc9-4f82-bea2-0446a913085e
-

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே கோயிலில் கூடையில் விட்டுச் செல்லப்பட்ட பிறந்து பத்து நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை மீட்கப் பட்டது.

கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த கொட்டையூர் ஊராட்சியில் உள்ள நரசமங்கலம் கிராமத் தில் சிலர் நேற்று பிற்பகலில் கோயில் மரத்தடியில் ஒதுங்கியபோது பச்சிளம் குழந்தை அழுகை சத்தம் கேட்டது. அருகில் சென்று பார்க்கையில் பிளாஸ்டிக் கூடையில் பிறந்த பத்து நாள்களே ஆன பச்சிளம் குழந்தை இருந்துள்ளது.

இது குறித்து தகவல் கிடைத்து அங்கு வந்த வட்டாட்சியர் விஜயகுமாரி, மப்பேடு காவல் நிலைய காவல்துறையினர் குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தையைக் கைவிட்ட பெண்ணை போலிசார் தேடி வருகின்றனர்.