குழந்தைகளுடன் சாலையில் அமர்ந்து பெண் போராட்டம் பெண்

உளுந்­தூர்­பேட்டை: சாத்தான் குளம் சம்பவம் போல் ஆகிவிடக் கூடாது என்று பயந்த பெண் ஒருவர், உளுந்­தூர் பேட்டை காவல்நிலை­யம் முன்பு நடு­சா­லை­யில் குழந்தைகளு­டன் அமர்ந்து தனது அண்ணன் ஜான­கி­ ராமனை உடனே விடுவிக்க வேண்டும் என்று முழக்கமிட்டு, போராட்டம் நடத்தினார்.

இதையடுத்து, அவ­ரு­டன் பேச்சு­வார்த்தை நடத்திய போலி சார், பெண்ணை சமாதானப்படுத்தி வீட்­டுக்கு அனுப்பி வைத்­த­னர்.

உளுந்­தூர்­பேட்டை அருகே கூவாடு கிரா­மத்­தைச் சேர்ந்­த­வர் வள்­ளி­கந்­தன். இவ­ரது மனைவி அபி­ராமி. இவர்­க­ளுக்கு இரு குழந்­தை­கள் உள்ள நிலை­யில், கண­வனும் மனைவியும் அடிக்­கடி சண்டை போட்டு வந்துள்ளனர். இதில் ஆத்­தி­ர­ம­டைந்த வள்­ளி­கந்­தன் அபி­ரா­மியைத் தாக்கியுள் ளார். அபி­ரா­மி­யின் சகோ­த­ரர்­கள் இருவர் வள்ளிகந்­த­னி­டம் சென்று இதுகுறித்து கேட்க, அவர்­க­ளுக்கு இடையே கைக­லப்பு ஏற்­பட்­டது. இது­கு­றித்த புகா­ரை அடுத்து ஜானகி­ரா­மனைப் போலி­சார் பிடித்துச் சென்று விசா­ரித்தனர்.