துணை முதல்வர் சகோதரருக்கு கிருமித்தொற்று

மதுரை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜாவுக்கு(படம்) கிருமித் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

இதனால், துணை முதல்வருக்கும் கொரோனா பரி சோதனை நடத்தப்பட்டுள்ளது. அவரது பரிசோதனை முடிவு கள் இன்னும் வெளியாக வில்லை.

சென்னை அல்லாத பிற மாவட்டங்களிலும் கொரோனா கிருமி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தேனி மாவட்டத்தின் ஆவின் தலைவரும் துணை முதல்வ ரின் சகோதரருமான ஓ.ராஜா வுக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு, மதுரை அப்போலோ மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேனி மாவட்டத்தில் இதுவரை 575 பேர் இக்கிருமி யால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா அச்சம் காரணமாக சென்னையில் இருந்து தேனி மாவட்டம் வந்த ஓ.பன்னீர்செல்வம், போடி சுப்பு ராஜ் நகரில் ஒரு வாடகை வீட்டில் குடும்பத்துடன் குடியேறியுள்ளார். வழக்கமாக பெரியகுளத்தில் உள்ள தனது வீட்டில் தங்கும் அவர், இம் முறை போடியில் தங்கியுள்ளார்.