சுடச் சுடச் செய்திகள்

சாத்தான்குளம்: அனைத்து காவலர்களும் மாற்றம்

சாத்­தான்­கு­ளம் காவல் ஆய்­வா­ளர் ஸ்ரீத­ரும் 2 காவல் உதவி ஆய்­வா­ளர்­களும் இடை­நீக்­கம் செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

சாத்­தான்­கு­ளம்: தூத்­துக்­குடி மாவட்­டம் சாத்­தான்­கு­ளம் காவல் நிலை­யத்­திற்கு புதி­தாக தலைமை காவ­லர், சிறப்பு உதவி ஆய்­வா­ளர் உள்­ளிட்ட 27 காவ­லர்­கள் நியமிக்­கப்­பட்டு உள்­ள­தாக மாவட்ட காவல்­துறை தக­வல் தெரி­வித்­துள்­ளது.

சாத்­தான்­கு­ளம் காவ­லர்­கள் விசா­ர­ணைக்கு ஒத்­து­ழைக்­கா­த­தால் வரு­வாய்த் துறை அதி­கா­ரி­கள் சாத்­தான்­கு­ளம் காவல்­நி­லை­யத்தை கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்­டு­வர வேண்­டும் என உயர்­நீ­தி­மன்ற மதுரைக் கிளை தெரி­வித்­துள்­ளது. மேலும் தட­ய­வி­யல் துறை அதி­கா­ரி­கள் சாத்­தான்­கு­ளம் காவல்­நி­லை­யத்­திற்­குச் சென்று அங்­குள்ள தட­யங்­க­ளைச் சேக­ரிக்க வேண்­டும் என­வும் நீதி­மன்­றம் தெரி­வித்­துள்­ளது.

இத­னி­டையே இந்த விவகாரத்­தில் சாத்­தான்­கு­ளம் காவல் ஆய்­வா­ளர் ஸ்ரீத­ரும் 2 காவல் உதவி ஆய்­வா­ளர்­களும் இடை­நீக்­கம் செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon