நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் இன்று காலை 5வது பிரிவில் இருந்த கொதிகலன் திடீரென வெடித்து தீப்பிடித்தது. இதில் பல தொழிலாளர்கள் சிக்கினர்.
அவர்களில் 6 பேர் உயிரிழந்தனர். 16 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
என்எல்சியில் இரண்டு மாதங்களுக்குள் நடந்த இரண்டாவது விபத்து இதுவாகும். இதற்கு முன்பு மே மாதம் நடந்த விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

