மதுரை: நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையை சிபிசிஐடி போலிசார் உருவாக்கியுள்ள தாக மதுரை உயர் நீதிமன்றக் கிளை தெரிவித்துள்ளது.
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று காலை விசாரணைக்கு வந்த போது, "சம்பவம் தொடர்பாக சாட்சியம் அளித்த காவலர் ரேவதியைத் தொடர்புகொண்டு நாங்கள் பேச உள்ளோம். காவலர் ரேவதிக்கு உரிய பாதுகாப்பும் வேலைக்கான சம்பளமும் முறைப்படி வழங்க வேண்டும்," என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

